
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், தென்னாப்பிரிக்க வீரர் மார்கோ யான்சன் 100 பந்துகளில் 85 ரன்கள் குவித்து அசத்தினார்.
8வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அவர், கேப்டன் டெம்பா பவுமாவுடன் இணைந்து 132 ரன்கள் சேர்த்தார். இது 60 ஆண்டுகள் பழமையான சாதனையை முறியடித்துள்ளது.
சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8வது வரிசையில் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்க பேட்டர் என்ற சாதனையை யான்சன் படைத்துள்ளார்.