
தைபேய் சிட்டியில் நடைபெறும் சீன தைபே ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதியில், 17 வயதான இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
உலக தரவரிசையில் 34-வது இடத்தில் உள்ள தன்வி ஷர்மா, 24-ம் நிலை வீராங்கனையான ஹூயாங் யு ஹூனை 21-17, 21-11 என்ற நேர்செட்டில் 33 நிமிடங்களில் வீழ்த்தினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் தன்வி ஷர்மா, வியட்நாமைச் சேர்ந்த 21-ம் நிலை வீராங்கனை துய்லின் நுயெனை எதிர்கொள்கிறார்.