இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 95,493 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 29,964 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 10,157 பேர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர், மேலும் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர்.