
சென்னை வானகரத்தில் வாடகைக்கு தங்கியிருந்த 4 பெண்கள் தங்கியிருந்த அறையில் ரகசிய கேமரா பொருத்தியதாக வீட்டின் உரிமையாளர் மகன் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மின்சார ஸ்விட்ச் பாக்சிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிநவீன கேமராவை பெண்கள் கண்டறிந்து அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
குற்றவாளி சரவணன் கேமராவை தனது செல்போனுடன் இணைத்து பெண்கள் உடை மாற்றுவதை நேரலையாக கண்காணித்து வந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.