
தமிழகத்தில் நவீன பொது சுகாதார சட்டத்தை இயற்ற அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதில் மருத்துவமனை அல்லாத இடங்களில் பிரசவம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
மருத்துவத்துறையில் 2026-27 நிதியாண்டில் 3,594 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதோடு, 70 வயதிற்கு மேற்பட்ட 38 லட்சம் முதியவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்கும் புதிய காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு மருத்துவ நகரம் (TN Medicity) உருவாக்க முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக 17.08.2026 அன்று சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவித்தார்.