
மஹிந்திரா நிறுவனம் தனது புதிய பிஇ-6 ஸ்போர்டெக் மின்சார காரை 11.45 லட்சம் ரூபாய் ஆரம்ப விலையில் இன்று அறிமுகம் செய்துள்ளது.
இந்த கார் 59 கிலோவாட் மற்றும் 79 கிலோவாட் என இரண்டு பேட்டரி வேரியண்ட்களில் கிடைப்பதுடன், அதிகபட்சமாக 683 கி.மீ. வரை மைலேஜ் வழங்குகிறது.
12 வண்ணங்களில் கிடைக்கும் இந்த கார், 100 கி.மீ. வேகத்தை வெறும் 6.4 நொடிகளில் எட்டும் திறன் கொண்டதுடன் பல்வேறு நவீன டிரைவ் மோட்களையும் கொண்டுள்ளது.