/polimer-news/media/media_files/2026/09/15/maduraimeenatchiammantemple-2026-09-15-12-25-44.jpg)
17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாளை மறுநாள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில், மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் உள்ளூர் பகுதிகளில் இருந்து சிறப்பு அலங்காரங்களுக்காக சுமார் 5 டன் மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பக்தர்கள் அதிகளவில் திரள்வார்கள் என்பதால் கோவில் வளாகம் மற்றும் முக்கிய சாலைகளில் பாதுகாப்புப் பணியில் சுமார் 6,500 போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.