
தமிழகத்தில் ரூ.4,730 கோடி மணல் குவாரி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் மாநிலம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட 30 மடங்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதை அமலாக்கத்துறை கண்டறிந்த நிலையில், தவெக அரசு தற்போது பூர்வாங்க விசாரணைக்கு பிறகு வழக்குப்பதிவு செய்துள்ளது.
திருச்சி, கரூர், புதுக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொழிலதிபர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்புடைய இடங்களில் இந்த ரெய்டு நடைபெறுகிறது.