
ஹாங்காங்கின் குவாய் சங் பகுதியில் உள்ள 'வா ஜெர்' உணவகத்தில் வாங்கப்பட்ட நூடுல்ஸ் பார்சலுக்குள் உயிருடன் இருந்த எலிக்குட்டி கண்டெடுக்கப்பட்டது.
உணவு டப்பாவைத் திறந்த பெண் அதிர்ச்சியடைந்து வீடியோ எடுத்த நிலையில், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
உணவு மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத் துறை அதிகாரிகள் உணவகத்தில் சோதனை நடத்தி, சுகாதாரக் குறைபாடுகள் காரணமாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.