ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) இணைய ஊடுருவல் தாக்குதலுக்கு உள்ளானதில் 3,897 வாடிக்கையாளர்களின் தனிநபர் தகவல்கள் கசிந்துள்ளன.
வாடிக்கையாளர் பெயர், கைப்பேசி எண், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, வீட்டு முகவரி, கடன் விவரங்கள் கசிந்துள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
வங்கி ஒரு இணையப் பாதுகாப்பு நிறுவனத்தை நியமித்துள்ளது. தரவுக் கசிவு வங்கியின் செயல்பாடுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது எனத் தெரிவித்துள்ளது.