
நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் 2-வது சுற்றில், இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியனான நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது.
நெதர்லாந்து அணியின் டெல்ஜென்காம்ப் டுக்கோ, செப் ஹூடேமேக்கர்ஸ் மற்றும் வான் டாம் தையிஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்த நிலையில், இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் 52-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக இழந்துள்ளது.