
காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கத்தைச் சேர்ந்த இருளர் இன கர்ப்பிணி தேன்மொழி, கொத்தடிமையாக சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரிழந்தார்.
ரூ.20,000 கடன் வாங்கியதற்காக மரக்கடை உரிமையாளர் ஆறுமுகம், தேன்மொழியை மருத்துவமனைக்குச் செல்ல விடாமல் தடுத்ததால், பிரசவத்தின்போது தாயும் பச்சிளம் குழந்தையும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்தச் சம்பவம் குறித்து BNSS பிரிவு 194-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ள உரிமையாளர் மீது விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.