
தவெக அரசின் 100 நாள் ஆட்சியை 'ரீல்ஸ் ஆட்சி' என்று விமர்சித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தவெக ஆட்சியில் அரிசி விலை கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளதாகவும், தேர்தல் வாக்குறுதிகள் எதையும் அரசு நிறைவேற்றவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேகேதாட்டு விவகாரத்தில் அரசு மெத்தனமாக இருப்பதாகவும், காவிரி நீரைப் பெற ஜூன் மாதத்திலேயே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.