
எலான் மஸ்க்கின் 'X' நிறுவனத்தின் தயாரிப்புப் பிரிவு தலைவராகப் பணியாற்றிய நிகிதா பியர், ஓராண்டு பணிக்குப் பிறகு தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தனது பதவிக்காலத்தில் 30 புதிய தயாரிப்புகள் மற்றும் பயன்பாட்டு அம்சங்களை அறிமுகப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இனி மூலோபாய ஆலோசகராகத் தொடர்வார்.
முன்னதாக 'tbh' மற்றும் 'Gas' ஆகிய செயலிகளை உருவாக்கிய நிகிதா பியர், ஆப்பிள் ஆப் ஸ்டோர் தரவரிசையில் 'X' தளம் 70 இடங்கள் முன்னேறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.