
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான பாலியல் வழக்கில் விசாரணை தாமதமின்றி விரைவுபடுத்தப்பட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் காவல்துறையின் விசாரணை மீது சந்தேகம் எழுந்துள்ளதால், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நியாயம் கிடைக்கவும், எதிர்கால சமுதாயத்தைப் பாதுகாக்கவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.