
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், முன்னணி வீராங்கனை கோகோ காப் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கிரிஸ்டினா புக்சாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற அமெரிக்க வீரர்களான டெய்லர் பிரிட்ஸ், மேடிசன் கீஸ் மற்றும் அமண்டா அனிசிமோவா ஆகியோர் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் காப் வெற்றி பெற்றுள்ளார்.
தொடர் தோல்விகளுக்கு மத்தியில் கோகோ காப்பின் இந்த வெற்றி அமெரிக்க டென்னிஸ் ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.