
சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத் மற்றும் அவரது சகோதரருக்கு, போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதற்காக டமாஸ்கஸ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
அசாத்தின் 14 ஆண்டுகால ஆட்சியில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது அவர் ரஷியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
அசாத் ரஷியாவில் இருப்பதால் தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல் உள்ளதாக சிரியா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது; தற்போது அகமது அல் ஷெரா புதிய அதிபராக உள்ளார்.