
வடகொரியா தனது கிழக்குக் கடற்பகுதியில் இருந்து ஜப்பான் கடலை நோக்கி 10-க்கும் மேற்பட்ட குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிப் பரிசோதனை நடத்தியுள்ளது.
இந்த ஏவுகணை சோதனையானது ஜப்பானின் பிரத்யேகப் பொருளாதார மண்டலத்திற்கு மிக அருகில் விழுந்ததால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எல்லைப் பகுதியில் நிலக்கண்ணிவெடி வெடித்த விவகாரத்தில் தென்கொரியா குற்றம் சாட்டியுள்ள நிலையில், வடகொரியா தனது ராணுவ பலத்தைக் காட்டும் நோக்கில் இந்த ஏவுகணை வீச்சை நடத்தியுள்ளது.