
ஜெர்மனியின் சாக்சனி-அன்ஹால்ட் மாகாண சட்டமன்றத் தேர்தலில், தீவிர வலதுசாரிக் கொள்கை கொண்ட 'ஏ.எப்.டி' கட்சி 43.8 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
மொத்தமுள்ள 83 இடங்களில் 39 இடங்களை இக்கட்சி கைப்பற்றியுள்ள நிலையில், கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆளுங்கட்சி வெறும் 17.2 சதவீத வாக்குகளுடன் படுதோல்வி அடைந்துள்ளது.
தனித்து ஆட்சி அமைக்க இன்னும் 3 இடங்களே தேவைப்படும் நிலையில், பிற கட்சிகள் கூட்டணி வைக்க மறுப்பதால் ஜெர்மனி அரசியலில் பெரும் இழுபறி நீடிக்கிறது.