
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் டோரதி திரைப்படத்தின் 'முத்துமணி' எனும் புதிய பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இசைஞானி இளையராஜா இசையமைத்து பாடியுள்ள இந்தப் பாடலை பரத் முரளிதரண் இயக்கியுள்ளார், இதில் ரிஷிகாந்த் மற்றும் சனந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இப்படத்தின் 'கல்யாண விருந்து' பாடல் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது புதிய பாடல் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.