
இஸ்ரோவின் 19-வது ஜிஎஸ்எல்வி எப்-17 ராக்கெட், இஓஎஸ்-05 செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று அதிகாலை 2:55 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
420.5 டன் எடை கொண்ட இந்த ராக்கெட், 18 நிமிடங்கள் 34 வினாடிகள் பயணித்து செயற்கைக்கோளை 36,000 கி.மீ. உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது.
வானத்தின் கண் என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள், இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே கண்டறியவும், நிலப்பரப்பை துல்லியமாக கண்காணிக்கவும் உதவும்.