
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், இன்னும் 10 முதல் 20 ஆண்டுகளில் மனிதர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை உருவாகலாம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் ரோபோக்கள் செய்யும் என்பதால், அரசாங்கங்கள் ரோபோ நிறுவனங்களிடம் வரி வசூலித்து மக்களுக்கு நிதி உதவி வழங்கும் 'யூனிவர்சல் ஹை இன்கம்' என்ற கருத்தை அவர் முன்வைத்துள்ளார்.
இருப்பினும், அரசின் பகிர்வு முறை சரியாக நடக்கவில்லை எனில், வளங்களை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனைத்தையும் அனுபவிக்கும் தொழில்நுட்ப நிலப்பிரபுத்துவமாக இது மாறக்கூடும் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.