
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்வதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த ஜூலை 20-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
முதல்வர் விஜய்யின் உத்தரவின்படி, மாவட்ட வாரியாக மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.