
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் ரூ.69 லட்சம் கோடியாக (729.33 பில்லியன் டாலர்) உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஜூன் 5 முதல் ஆகஸ்ட் 21 வரை வெளிநாடு வாழ் இந்தியர்களின் வைப்புத்தொகை மூலம் மட்டும் சுமார் 65 பில்லியன் டாலர் பெறப்பட்டுள்ளது.
தங்க இருப்பு 2.8 பில்லியன் டாலர் அதிகரித்து 114.22 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, இது பொருளாதாரத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அரணாக அமையும்.