
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 23-வது காமன்வெல்த் போட்டியில் மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேலுக்கு 30 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற செல்வ பிரபுவுக்கு 20 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.
இறுதிப் போட்டியில் பிரவீன் 16.58 மீட்டர் தூரமும், செல்வ பிரபு 16.52 மீட்டர் தூரமும் தாண்டி முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.