
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி மற்றும் பிரவீன் சித்திரவேல் ஆகியோருக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் வழங்கினார்.
வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர் செல்வ பிரபுவுக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலையை முதல்வர் ச.ஜோசப் விஜய் நேற்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு வீரர்களைப் பாராட்டினர்.