
UPI மூலம் ரூ.2,000க்கு மேல் பணம் அனுப்பினால் MDR கட்டணம் பிடிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும், கடைகளில் பொருட்கள் வாங்கும் கஸ்டமர்களுக்கு எந்த கட்டணமும் கிடையாது.
நண்பர்களுக்கு அனுப்புவது, குடும்பத்தினருக்கு அனுப்புவது மற்றும் ஒரு நாளைக்கு ரூ.1 லட்சத்திற்குள் செய்யப்படும் P2P பரிமாற்றங்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லை. மாதத்திற்கு ரூ.20 லட்சம் வரை பிசினஸ் நடக்கும் சிறிய கடைகளுக்கும் இந்த கட்டணம் கிடையாது.
வியாபாரிகள் Paytm Wallet, PhonePe Wallet அல்லது கிரெடிட் கார்டு போன்றவற்றை UPI உடன் இணைத்து பணம் அனுப்பும்போது குறிப்பிட்ட MDR கட்டணம் பொருந்தும்.