Health & Environment
தீபாவளியன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தீபாவளியன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Polimer News2h
THE BRIEF
1

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2

செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 27 மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இன்று மிதமான மழையும், நாளை மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

3

வரும் நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி பண்டிகையன்று தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.