
2027 அக்டோபர்-நவம்பரில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா இணைந்து நடத்தும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 12 மைதானங்களை ஐசிசி அறிவித்துள்ளது.
மொத்தம் 14 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 54 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், 44 போட்டிகள் தென்னாப்பிரிக்காவின் 8 மைதானங்களில் நடத்தப்படும்.
நமீபியா தனது கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக உலகக்கோப்பை போட்டியை சொந்த மண்ணில் நடத்தத் தகுதி பெற்றுள்ளது.