
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 பேர் உயிரிழந்த நிலையில், பதிலடியாக உக்ரைன் 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.
4 ஆண்டுகளைக் கடந்து நீடிக்கும் இந்தப் போரில், மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் உக்ரைனின் ட்ரோன் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் சமரச முயற்சிகள் பலனளிக்காத நிலையில், ரஷ்யா மீதான உக்ரைனின் இந்த அதிரடி தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.