
விஜே சித்து எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் 'டயங்கரம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ மூலம் அறிவித்துள்ளது.
வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் நட்டி, காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான் மற்றும் கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சித்து குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், காமெடி மற்றும் எமோஷன் கலந்த கதையாக இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.