
இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்ட 33 வயதான சரன்ஷ் ஜெயின் முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார்.
தொடைத் தசை காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், சுப்மன் கில் கேப்டனாகவும் கே.எல். ராகுல் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள்.