
அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
பாதுகாப்பு கருதி பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.