
சென்னையில் நடக்கும் டபிள்யு.டி.ஏ. 250 சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு இந்தோனேஷியாவின் ஜானிஸ் டிஜென் முன்னேறினார்.
இரண்டாவது சுற்றில் ஜானிஸ் டிஜென், 7-6, 6-1 என்ற நேர் செட் கணக்கில் சீனதைபேயின் ஜோன்னா கார்லாண்டை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் வைஷ்ணவி மற்றும் ருதுஜா ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது, மற்றொரு இந்திய ஜோடியான தியா மற்றும் தீப்ஷிகா தோல்வியடைந்தனர்.