
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய சியரா மாடலை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இது கியா செல்டோஸ் காருக்கு நேரடிப் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா சியரா பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் என இரு வகைகளில் வெளியாகிறது, இதன் எலக்ட்ரிக் மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 400 முதல் 500 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது.
கியா செல்டோஸ் 10.90 லட்சம் முதல் 20.35 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகும் நிலையில், புதிய டாடா சியராவின் விலை சுமார் 15 லட்சம் ரூபாயிலிருந்து தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.