
நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் 40-வது திரைப்படமான 'ஐ அம் கேம்' படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
சூதாட்ட விளையாட்டை மையமாகக் கொண்ட இப்படம் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஆகஸ்ட் 20-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின் மற்றும் கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.