
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள 'சிக்மா' படத்தின் இரண்டாவது பாடலான 'அய்யய்யோ அம்மாடி' நாளை வெளியாகிறது.
லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்க, பரியா அப்துல்லா மற்றும் ராஜு சுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆக்சன் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், ஜூலை 31-ல் வெளியாகவிருந்த படம் ஒத்திவைக்கப்பட்டது.