
கிரிப்டோகரன்சி முதலீடு என்ற பெயரில் இருமடங்கு லாபம் தருவதாகக் கூறி சுமார் 400 கோடி ரூபாய் வரை மோசடி செய்த FQL நிறுவனம் தொடர்பான வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக இதுவரை 40,000 புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், சந்தேகத்திற்குரிய 13 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.