
சீனாவில் நடைபெறவுள்ள உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகளின் முன்னோட்டமாக நடத்தப்பட்ட ஓட்டப்பந்தயத்தில், யூனிட்ரீ நிறுவனத்தின் 'H1' ரோபோ விபத்துக்குள்ளானது.
இந்தத் தொடரில் 16 நாடுகளைச் சேர்ந்த 666 குழுக்களின் 2,000-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் பங்கேற்க உள்ள நிலையில், விபத்தில் சிக்கிய ரோபோவின் இடுப்புப் பகுதி பலத்த சேதமடைந்தது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியைப் பரிசோதிக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்தத் தொடரில், ரோபோ கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.