
திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி முதல்வர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதி வெற்றியை எதிர்த்து ஜூன் 17-ல் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தான் மே 10-ம் தேதியே எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக முதல்வர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் அறிவிக்க முடியாது என்ற தேர்தல் கமிஷனின் வாதத்தை மறுத்துள்ள முதல்வர், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரியுள்ளார்.