
டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டி உள்ளிட்ட 2-வது கட்ட ஆட்டங்கள் நாளை முதல் 28-ந்தேதி வரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளன.
இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.30 மணி முதல் சேப்பாக்கம் மைதான கவுண்ட்டரில் தொடங்குகிறது.
டிக்கெட்டுகளின் குறைந்தபட்ச விலை ரூ.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் District.in இணையதளம் மூலமாகவும் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.