
சிஎஸ்ஐஆர் 85-வது ஆண்டு விழாவையொட்டி, சென்னை தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தை பொதுமக்கள் பார்வையிடலாம்.
கட்டிட உறுதி சோதனை, பேரிடர் மேலாண்மை, 3-டி அச்சு தொழில்நுட்பம் போன்ற புதிய தொழில்நுட்ப பணிகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் செப்டம்பர் 28 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முன் அனுமதி இன்றி பார்வையிடலாம்.