
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மின் கம்பத்தில் மோதியதில், உணவக செக்யூரிட்டி ரவீந்திரன் நூலிழையில் உயிர் தப்பினார்.
கார் மோதிய வேகத்தில் சிமெண்ட் மின் கம்பம் இரண்டாக உடைந்து நொறுங்கியதால், கார் அவர் மீது நேரடியாக மோதுவது தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில் செக்யூரிட்டிக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்ட நிலையில், காரில் இருந்தவர்களுக்கும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.