
மருத்துவ அறிவியல் வளர்ச்சியால் உலக மக்களின் சராசரி ஆயுட்காலம் 1900இல் 32 ஆக இருந்த நிலையில் இன்று 73.5 ஆக உயர்ந்துள்ளது.
ஹைப்போதலாமஸில் உள்ள மெனின் புரதத்தின் அளவு குறையும்போது வயதாதல் மற்றும் நினைவாற்றல் குறைவு ஏற்படுவதாகச் சீனக் குழுவின் ஆய்வு காட்டுகிறது.
வயதான எலிகளில் மெனின் அளவை அதிகரித்தபோது ஆயுட்காலம் நீடித்ததும், FTL1 புரதத்தைக் குறைத்தபோது நினைவாற்றல் மேம்பட்டதும் சோதனைகளில் கண்டறியப்பட்டது.