
பெங்களூர் கெம்பேகவுடா விமான நிலையத்தில் செப்டம்பர் 1 முதல் உள்நாட்டு பயணிகளுக்கான கட்டணம் ரூ.550-லிருந்து ரூ.300 ஆகவும், வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.1,500-லிருந்து ரூ.997 ஆகவும் குறைகிறது.
புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பயனர் மேம்பாட்டு கட்டணத்தின்படி, வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு ரூ.426-ம், இந்தியாவின் பிற நகரங்களிலிருந்து வரும் பயணிகளுக்கு ரூ.125-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுடன் இந்த புதிய கட்டண மாற்றங்கள் அமலுக்கு வருவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.