
சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் சர்க்காரியா கமிஷன் குறித்துப் பேசியதற்குப் பதில் அளிக்கும் வகையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
முதல்வர் விஜய் தனக்கு எழுதி கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்டைப் பேசி வருவதாகவும், சர்க்காரியா கமிஷன் தொடர்பான உண்மைகளை விவாதிக்கத் தயாரா என்றும் பாரதி சவால் விடுத்தார்.
அண்ணா தியேட்டர் விவகாரம் குறித்துப் பேசிய பாரதி, ஆதாரமற்ற புகார்களைக் கொண்டு அரசியல் செய்வதாக முதல்வர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார்.