நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க காங்கிரஸ் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால், வயது வந்த அமெரிக்கர்கள் ஒவ்வொருவருக்கும் 5,000 டாலர் வழங்கப்படும் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
டல்லாஸில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய ட்ரம்ப், இந்தத் தொகையை 'ட்ரம்ப்பின் ஈவுத்தொகை' என்று அழைத்ததோடு, ஈரான் போர் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் கருத்துக் கணிப்புகளில் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்திக்கும் நிலையில், இந்த அறிவிப்பு லஞ்சம் என சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.