வாட்ஸ்அப் செயலியில் மின்சாரம், கேஸ் பில் மற்றும் ஃபாஸ்டேக் கட்டணங்களைச் செலுத்தும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் கூகுள் பே, போன்பே போன்ற செயலிகளைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்கிலேயே இந்த சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது.