International
ஜப்பான் மற்றும் சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பான் மற்றும் சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Puthiyathalaimurai5h
THE BRIEF
1

ஜப்பானின் டோக்கியோ கடற்கரைப் பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறினர்.

2

ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின்படி டோக்கியோ நகருக்கு கிழக்கே உள்ள அசாஹி பகுதிக்கு தென்கிழக்கே சுமார் 169 கி.மீ. தொலைவில் குறைந்த ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

3

இதேபோல் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் ஏற்பட்ட 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் தாக்கம் இந்திய எல்லைப் பகுதிகளிலும் எதிரொலித்த நிலையில், லடாக் மற்றும் காஷ்மீரில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.