/nakkheeran/media/media_files/2026/10/28/nes-2026-10-28-10-54-06.jpg)
துபாயின் டேரா பகுதியில் தங்க நகரத்தை மேலும் மெருகூட்டும் வகையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில் பிரமாண்டமான 24 கேரட் தங்கத்தினாலான நடைபாதை தயாராகி வருகிறது.
உலகின் மிக நீளமான இந்தத் தங்க நடைபாதை அடுத்த இரண்டு மாதங்களுக்குள், அதாவது இந்த ஆண்டின் இறுதிக்குள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கம் வாங்க வரி இல்லாத துபாயில் கடந்த ஜனவரியில் 'தங்க மாவட்டம்' தொடங்கப்பட்ட நிலையில், தற்போது தங்கத்தினால் பாதை உருவாக்கப்படுவது இணையத்தில் வைரலாகி வருகிறது.